நயன்தாராவை தொடர்ந்து த்ரிஷாவும் பச்சை குத்த தொடங்கி உள்ளாராம்..
இது யாருக்கான ஏக்கமோ தெரியவில்லை, கவனம் திருமதிகள்
அத்தோடு தீவிரமாக யோகப் பயிற்சிகள் செய்து வருகிறாராம் த்ரிஷா. இதனால் முன்பு தளர்ந்த தோற்றத்துடன் காணப்பட்ட அவரது தோள்பட்டை மற்றும் கைகள் இப்போது சிக்கென்று காட்சி தருவதாக அவரே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார்.
இது இப்படியே இருக்க பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில்டங்களில் நடித்த ஜெனிலியா (எனக்கு ரொம்ப பிடிக்கும்) தனுசுடன் இயக்குனர் மித்திரன் (இவர் யாரடி நி மோகினி படத்தின் இயக்குனர் ) Direct பண்ணும் படத்துக்கு ஒப்பந்தமாயிருக்கிறார். படத்துக்கு என்னும் பெயர் வைக்கவில்லையாம்.
இயக்குனர்கள் எல்லாரும் நடிக்கத்தொடங்கி உள்ள நிலையில் நடிகர் ஒருவர் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார். தமிழ் படங்களில் ரஜனி கமலுக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கிய ஒரு மாபெரும் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தான் இந்த கன்னி முயற்சியில் இறங்கி உள்ளார்.
பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீ மேக் பண்ணுகிறார்.
நடிகராக ஒரு நிலையில் இல்லாத இவர் சிறந்த இயக்குனராக வர வாழ்த்துக்கள்.










